Editorial / 2017 மே 22 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் தொடரில், இவ்வாண்டுக்கான தொடரின் சம்பியன்களாக, மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவாகியுள்ளது. றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட் அணியை வீழ்த்தியே, இந்தப் பெருமையை, மும்பை அணி பெற்றுக் கொண்டது.
ஹைதரபாத்தில், நேற்று (21) நடைபெற்ற இறுதிப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை, ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியிருந்த நிலையில், குருணால் பாண்டியாவின் சமயோசிதமான துடுப்பாட்டத்தின் காரணமாக, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, போராடக்கூடியவாறான 129 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 130 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பூனே சுப்பர்ஜையன்ட் அணி, இலகுவாக வெற்றிபெறும் என்று கருதப்பட்ட நிலையில், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது, மிற்செல் ஜோன்சன் வீசிய இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில், முதலாவது பந்தில் நான்கு ஓட்டங்கள் பெறப்பட்டபோதும், அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், மனோஜ் திவாரியின் விக்கெட்டுகளை இழந்த பூனே, தோல்வியைத் தளுவியது. இறுதிப் பந்தில் 4 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில், இரண்டு ஓட்டங்கள் மாத்திரமே பெறப்பட்டிருந்தது.
இறுதிப் போட்டியின் நாயகனாக, குருணால் பாண்டியா தெரிவானதோடு, தொடரின் பெறுமதி வாய்ந்த வீரராக, பூனேயின் பென் ஸ்டோக்ஸ் தெரிவானார். தொடரின் சிறந்த இளம் வீரராக, குஜராத் அணியின் பசில் தம்பி தெரிவானார். தொடரின் சிறந்த நன்நடத்தையை வெளிப்படுத்திய அணியாக, குஜராத் தெரிவானது.
37 minute ago
40 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
40 minute ago
44 minute ago
1 hours ago