2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

பதவி விலகினார் அலர்டைஸ்

Editorial   / 2017 மே 24 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிறிஸ்டல் பலஸ் கழகத்தின் முகாமையாளர் சாம் அலர்டைஸ், தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளதோடு, இன்னொரு புதிய பதவியைத் தேடப் போவதில்லையெனவும் அறிவித்துள்ளார்.

பிறீமியர் லீக் தொடரில், அடுத்த பருவகாலத்திலும் கிறிஸ்டல் பலஸ் அணி பங்குபெறுவதை உறுதிசெய்த பின்னரே, அவர் இவ்வாறு ஓய்வுபெறவுள்ளார்.

62 வயதான அலர்டைஸ், தனது குடும்பத்துடன் மேலதிக நேரத்தைச் செலவிடுவதற்காக, இந்த முடிவை எடுப்பதாக அறிவித்துள்ளார்.

கடந்தாண்டு டிசெம்பரில், கழகம் 17ஆவது இடத்தில் இருக்கும் போது அணியைப் பொறுப்பெடுத்த அலர்டைஸ், அணியை, 14ஆவது இடத்தில் முடித்து, தனது முகாமையின் கீழ், எந்தவோர் அணியும், பிறீமியர் லீக்கிலிருந்து வெளியேற்றப்படவில்லை என்ற சாதனையைத் தக்க வைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .