2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

அரையிறுதிப்போட்டியை பார்வையிட வருமாறு நியூஸிலாந்து பிரதமருக்கு ஜனாதிபதி அழைப்பு

Super User   / 2011 மார்ச் 27 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை  - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியை நேரில் பார்வையிட வருமாறு நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீயை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்துள்ளார்.

ஆர்.பிரேமதாஸ அரங்கில் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை இப்போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 10 விக்கெட்டுகளால் தோற்கடித்து அரையிறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றது.

உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் எதிர்வரும் புதன்கிழமை மொஹாலியில்  நடைபெறவுள்ளது.

இறுதிப்போட்டி ஏப்ரல் 2ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .