2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றது

Super User   / 2011 ஏப்ரல் 02 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இவ்வருட உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இந்திய அணி சம்பியனாகியுள்ளது.

இன்று மும்பை வாங்கடே அரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் தோற்கடித்து இந்திய அணி சம்பியனாகியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2  ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

10 ஆவது தடவையாக நடைபெற்ற இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இவற்றில் இந்திய அணி இரண்டாவது தடவையாக சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன் 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி சம்பியனாகியிருந்து. 28 வருடங்களின் பின் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.

சொந்த மண்ணில் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை வென்ற முதல் அணி இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

உபுல் தரங்க 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். திலகரட்ன தில்ஷான் பந்துகளில் 33 ஓட்டங்களையும் அணித்தலைவர் குமார் சங்கக்கார பந்துகளில் ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் திலான் சமரவீர 21 ஓட்டங்களுடனும் திலகரட்ன தில்ஷான் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தபோது இலங்கை அணி நெருக்கடிக்குள்ளானது. 40 ஆவது ஓவரில் 32 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சாமர கப்புகெதர ஆட்டமிழந்தபோது  இலங்கை அணி 182 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

எனினும் அதன்பின் இலங்கை வீரர்கள் ஓட்ட வேகத்தை அதிகரித்தனர். நுவன் குலசேகர 30 பந்துகளில் 32 ஓட்டங்களைப்பெற்றார்.

திசேர பெரேரா 9 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றார். மஹேல ஜயவர்தன 88  பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களைப் பெற்றது.  ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மஹேலவின் 13 ஆவது சதம் இதுவாகும். உலகக்கிண்ணப் போட்டிகளில் இது அவரின் 3 ஆவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பந்துவீச்சாளர்களில் ஸஹீர்கான், யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும்  ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்திய அணி அணி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய போது வீரேந்தர் ஷேவாக் 2 ஆவது பந்துவீச்சிலேயே ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழந்தார். லசித் மலிங்கவின் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஷேவாக் ஆட்டமிழந்தார்.

7 ஆவது ஓவரில் இந்தியா 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மற்றொரு மாபெரும் விக்கெட்டை வீழ்த்தினார் மலிங்க. 100 சதத்தை பெற காத்திருந்த சச்சின் டெண்டுல்கர் 14 பந்துகளில் 18 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மலிங்கவின் பந்துவீச்சில் குமார் சங்கக்காரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இரு முக்கிய விக்கெட்டுகள் விழுந்ததையடுத்து ஜோடி சேர்ந்த கௌதம் காம்பீரும் வீரட் கோலியும் உடனடியாக மற்றொரு விக்கெட் விழுவதை தடுக்கும் வகையில் நிதானமாகத் துடுப்பெடுத்தாடினர்.

இந்திய அணி 22 ஆவது ஓவரில் 114 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது வீரட் கோலி  49 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

அவ்வேளையில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது.

ஆனால், 4 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித் தலைவர் எம்.எஸ்.டோனியும் கௌதம் காம்பீரும் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

பொறுமையாக துடுப்பெடுத்தாடிய கௌதம் காம்பீர் இந்திய அணி வலுவான நிலையில் இருந்தபோது 3 பந்துகளில் சதத்தை தவறவிட்டார்.

அவர் 122 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் திசேர பெரேராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு  233 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அதன்பின் யுவராஜ் சிங் - மஹேந்திர சிங் ஜோடி இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது.

யுவராஜ் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றார்.
 
இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் அவ்வணியின் தலைவர் டோனி முக்கிய பங்குவகித்தார். அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அவர் 79 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பௌண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களைப் பெற்றார்.


49 ஆவது ஓவரின் 2 ஆவது பந்தில் இந்திய அணி 4 ஓட்டங்கள் மாத்திரம் தேவையான நிலையில் இருந்தது. நுவன் குலசேகரவின் பந்தை எதிர்கொண்ட டோனி சிக்ஸர் அடித்து வெற்றி இலக்கை கடந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பந்துவீச்சாளர்களில் லசித் மலிங்க 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். திசேர பெரேரா 55 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் திலகரட்ன தில்ஷான் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய முத்தையா முரளிதரன் 8 ஓவர்கள் பந்துவீசி 39 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்தார். எனினும் அவர் விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை.

இப்போட்டியில் இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக எம்.எஸ்.டோனியும் இச்சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக யுவராஜ் சிங்கும் தெரிவு செய்யப்பட்டனர்.


 


  Comments - 0

 • balasubramanian Sunday, 03 April 2011 02:29 PM

  சிறப்பான நடுவுநிலைமையான விமர்சனம். தமிழ் மிரருக்கு வாழ்த்துக்கள். பாலசுப்ரமணியன், சென்னை 89

  Reply : 0       0

  Mujeeb Sunday, 03 April 2011 03:09 PM

  இலங்கைக்கு கனடா, சிம்பாப்வே போன்ற நாடுகளுடன் மேட்ச் வந்தால் கப் எடுப்பாங்க

  Reply : 0       0

  M. Thilipan Monday, 04 April 2011 03:04 PM

  குட் லக் போர் இந்தியா அண்ட் வெள் டன் போர் ஸ்ரீ லங்கா

  Reply : 0       0

  xlntgson Monday, 04 April 2011 08:51 PM

  இந்தியா பணம் கொடுத்து வென்று விட்டது என்று கூறுவதைத் தவிர மற்ற எல்லா விமர்சனங்களையும் பொறுத்துக்கொள்ளலாம். அவ்வாறு கூறுவதன் மூலம் யாரேனும் தனது தேச பக்தியை வெளிப்படுத்திக்கொள்வதாக நினைத்தால் அதைப் போல் முட்டாள் தனம் எதுவும் இல்லை. இது இளைஞர்களுக்கானது ஆகவே 35 வயதிற்கு மேற்பட்டவர்களை விலக்கி விடவேண்டும் என்பதும் சனத், சமிந்த வாஸ் போன்ற மூத்த வீரர்கள் சாதனை புரிந்திருப்பர் என்பதும் சமமான வாதமே. அதேநேரம் ஒரு பந்தை தவற விட்ட குலசேகரவை குறைகூறினால் பிடிக்காமல் விட்ட பந்துகளினால் இந்தியாவுக்கு மட்டும்

  Reply : 0       0

  xlntgson Monday, 04 April 2011 08:58 PM

  நஷ்டமில்லையா? இறுதியில் runrate ஓட்ட வேகம் பார்த்து இந்தியாவைவிட இலங்கை முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது அதற்காக இந்தியாவுக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டிருக்கிறது ஆகவே வெற்றி தோல்வி சமமே. மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டு runrateஓட்டவேக அடிப்படையில் தீர்க்கப்பட்டிருந்தால் இலங்கை வென்றிருக்கும் என்று கூறாமலே விளங்குகிறது, அல்லவா? முரளியையும் அனுப்பி இருக்கக்கூடாது என்றும் சொல்கிறவர்கள் இருக்கின்றார்களே, இது தான் விளையாட்டு வினையாகின்ற விதம்! இலங்கையில் ஆர்ப்பாட்டம் அதிகம் என்கிறவர்கள் இருக்கின்றனர்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .