2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பிரதி தலைவர் பதவியிலிருந்து மஹேல ராஜினாமா

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதி தலைவர் பதவிலியிருந்து தான் விலகியுள்ளதாக மஹேல ஜயவர்தனவினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அதன் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்தார்.

 

உலகக் கிண்ண போட்டியை அடுத்து மஹேல தனது பிரதித் தலைவர் பதவியை விட்டு விலகுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்இ இன்று காலை கடிதமொன்றை சமர்ப்பித்த மஹேல ஜயவர்தனாஇ 'தான் பதவியிலிருந்து விலகுவதாகவும் அந்தப் பதவியில் நிலைத்திருக்க தான் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்' என்று நிசாந்த ரணதுங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான அணித்தலைவர் பதவியிலிருந்து குமார் சங்கக்கார நேற்று செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • suji Wednesday, 06 April 2011 09:50 PM

  கிரிக்கட்டில் அரசியல் புகுந்தால் திறமையானவர்கள் எப்படி விளையாடுவது... உலக கிண்ணம் எப்படிக் கிடைக்கும்...தேநீர் கிண்ணமே கிடைக்காது இப்படிபட்ட கிரிக்கெட் தேவையா

  Reply : 0       0

  A.M.Sihan Thursday, 07 April 2011 10:28 AM

  மக்களின் விருப்பம் கூட குறைந்து கொண்டு செல்கின்றது. இலங்கை அணி பற்றிய எதிர்கால நிலைமை என்ன? விளையாட்டும் அரசியலாக மாறிவிட்டது . தெளிவாக விளங்குகின்றது. மேல் குறிப்பிட்டது போல் இலங்கைக்கு தேநீர் கிண்ணம் கூட கிடைக்காது.

  Reply : 0       0

  xlntgson Thursday, 07 April 2011 08:57 PM

  முற்றாக அரசியலிலிருந்து எதையும் மீட்பது கடினம்; அரசு பெரும் பணம் செலவிடுகிறது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல எல்லா விளையாட்டுக்கும்.
  ஆனால் ஒவ்வொருவரும் அரசியல் நுழையாது இருக்க தன்னால் ஆன பங்களிப்பை கட்சி சார்பற்று செய்தால் நல்லது. சுயநலமில்லாமல்
  தன்னலம் வேண்டுமென்றால் செய்ய வழி இல்லை.
  நீதித் துறை: வழக்கறிஞர் சங்கம் மற்றும் காவற்துறை சிறைத்துறை நடுநிலை தவறாதிருந்தால் அரசியல் எதிலும் புக முடியாது. விளையாட்டில் மட்டுமல்ல கல்வி சுகாதாரம் தேர்தல் போன்ற துறைகளிலும்,
  சில நேரங்களில் நான் நல்ல கனவு காண்கிறேனோ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .