2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

உலகக் கிண்ண இறுதிப்போட்டி: 125,000 லட்சம் கோடி ரூபா சூதாட்டம்

Super User   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மும்பையில்  இன்று நடைபெறும் இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி தொடர்பாக 50,000 கோடி இந்திய ரூபா ( சுமார் 125,000 லட்சம் கோடி  இலங்கை ரூபா) சூதாட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல சூதாட்ட முகவர்கள் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதுகிறார்கள். அதனால் இலங்கை அணி வெற்றி பெறும் என பந்தயம் கட்டுபவர்களுக்கு அதிக பணம் வழங்க அவர்கள் முன்வந்துள்ளனர்.

இலங்கை அணி வெல்லும் என பந்தயம் கட்டுபவர்களுக்கு லாபத் தொகையாக ஒவ்வொரு ரூபாவுக்கும் 1.38 ரூபா இந்திய அணி வெல்லும் என பந்தயம் கட்டப்படும் ஒவ்வொரு ரூபாவுக்கும் சன்மானமாக 46 சதமும் வழங்கப்படும் என சூதாட்ட முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, இலங்கை அணி வெல்லும் எனக் கூறி ஒரு ரூபா பந்தயப் பணமாக செலுத்துபவர்களுக்கு இலங்கை அணி வென்றால் முதல் முதல் தொகையுடன் ஒரு ரூபா 38 சதம்  வழங்கப்படும். அதேபோல் இந்திய அணி வெல்லும் என பந்தயம் கட்டுபவர்கள் வெற்றிபெற்றால் அவர்களின் முதல் தொகையுடன் ஒவ்வொரு ரூபாவுக்கும் 46 சதம் லாபத் தொகையாக வழங்கப்படும்.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடித்தபோது சூதாட்டம் மிகவும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

போட்டியின் வெற்றி தோல்வி மாத்திரமன்றி நாணயச் சுழற்சியின் வெற்றி, முதலில் துடுப்பெடுத்தாடும் அணி எது, சதங்கள், அரைச்சதங்கள்  என்பன தொடர்பாகவும் சூதாட்டம் நடத்தப்படுகிறது.

சச்சின் டெண்டுல்கர் இறுதிப்போட்டியில் அரைச் சதம் அடிப்பார் என பந்தயம் கட்டுபவர்களுக்கு 90 சத வீதமும் சதம் அடிப்பார் என பந்தயம் கட்டுபவர்களுக்கு பந்தயத் தொகையின் ஒவ்வொரு ரூபாவுக்கும் 5 ரூபா வீதமும் லாபமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது..

யுவராஜ் சிங்கின் அரைச்சதத்திற்கு 1.25 ரூபா வீதமும் சதத்திற்கு 6.20 ரூபா வீதமும் வழங்கப்படும்.

கோவா மற்றும் குஜராத் பிராந்தியங்களில் மடிக்கணினிகள் செல்லிடத் தொலைபேசிகள் உட்பட நவீன இலத்திரனியல் சாதனங்களுடன் இச்சூதாட்டநடடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இம்முறை உலகக்கிண்ண இறுதிப்போட்டியை பார்வையிடுவதற்கு பெரும் எண்ணிக்கையிலான வி.ஐ.பி.கள் மும்பை பெற்றுள்ளதால் மும்பை மற்றும் மஹாராஷ்டிராவின் ஏனைய பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதிகளுக்கு வெளியிலேயே சூதாட்டம் அதிகமாக நடைபெறுகிறது.

வீரேந்தர் ஷேவாக்கின் அரைச் சதத்திற்கு 1.05 ரூபாவும் சதத்திற்கு 5.50 ரூபா வீதமும்  வழங்கப்படவுள்ளது. கௌதம் காம்பீருக்கு இத்தொகை முறையே 1.10 மற்றும் 6.00 ரூபாவாக உள்ளது. 


  Comments - 0

 • Mohammed Saturday, 02 April 2011 08:33 PM

  சூதாட்டம் கூடாது ஆகையால் இந்த கிரிகெட்ட பகிஷ்கரிங்கோ என்றால் கேட்பாங்கலா .எல்லோரும் சூதாடிகள் ,இதெல்லாம் வெட்கம் இல்லாத கொண்டாட்டம்

  Reply : 0       0

  xlntgson Monday, 04 April 2011 09:12 PM

  எதையும் சூதாட்டமாக்கும் நிலை தான் தெரிகிறது வியாபாரத்தைக்கூட வாங்கின விலைக்கும் குறைவாக விற்று பணம் பண்ணும் முறையில் சூதாட்டமாக்க இயலும்!அது போல தேர்தலைப் பாருங்கள், சூதாட்டம் இல்லையா? இந்திய தேர்தல் ஆணையர் கூறுகின்றார்: இரண்டு கோடி செலவு பண்ணி இருபது கோடி ஊழல் பண்ணும் தொழில், அரசியல் என்று ! சொல்வது யார் தெரிகிறதா, இப்போது தேர்தல் நடக்கப் போகிறதே தமிழ் நாட்டில், அங்கே சுயாதீனமான தேர்தல் ஆணையராக இருக்கும் அவர்தான்! கருணாநிதி புலம்புகிறார்: இப்போது தமிழ் நாட்டை ஆள்வது, நானா தேர்தல் ஆணையமா என்று!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .