Editorial / 2021 ஏப்ரல் 04 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எத்தனோல்… எத்தனோல்… என அனைத்து இடங்களிலும் கூறப்பட்டது. பதாகைகள் ஒட்டப்பட்டமை நினைவிருக்கும் அல்லவா? எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்களிடையே அணுகுமுறை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். திருட்டுத் தனமாக செயற்படும் இந்த வர்த்தகர்களும் எமது மக்களே. திருட்டுத்தனமாகக் கொண்டு வருகின்றனர். அவற்றைக் கைப்பற்றவே அரச நிறுவனங்கள் உள்ளன. அவற்றைக் கைப்பற்றாவிட்டால், அவை மக்களைச் சென்றடையும் என்றார்.
கிராமத்துடன் கலந்துரையாடல் திட்டத்தின் 17 ஆம் கட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதலைமையில் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் நேற்று (03) நடைபெற்றது.
வட மாகாணத்தில் இடம்பெற்ற முதலாவது கிராமத்துடன் கலந்துரையாடல் இதுவாகும்.
இதன்போது, சூழல் அழிப்பு குற்றச்சாட்டு தொடர்பிலும் புற்றுநோய்க் காரணியுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளை வன பாதுகாப்பு அதிகாரிகள் பார்ப்பதில்லை எனவும் வன பாதுகாப்பு பணிகளில் மாத்திரமே ஈடுபடும் அவர்கள் மறுபுறத்தை கவனிப்பதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் தெங்கு அபிவிருத்தி செய்யப்படாததால், தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் உரிய தரத்தில் உள்ளதா என ஆராய அதிகாரிகள் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதனை கைப்பற்றியவுடன் அரசாங்கத்தை பலரும் தூற்றுவதாகக் கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டி, அவரை தோற்கடிப்பதற்கு எத்தனோல் ஒரு காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கும் என்றார்.



14 minute ago
18 minute ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
6 hours ago
6 hours ago