Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் சகலருக்கும் 3 இடங்களில் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இந்த பரிசோதனைகள் மறு அறிவித்தல் வரையிலும் முன்னெடுக்கப்படும்.
“மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் போது, மூன்று வெளியேறும் இடங்களில் வைத்தே இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்” என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கொழும்பு- கண்டி வீதியில், நிட்டம்புவ எனுமிடத்தில் மேற்கொள்ளப்படும்.
கொழும்பு- அவிசாவளை வீதியில், கொஸ்கம, சாலாவ பிரதேசங்களில் வைத்து முன்னெடுக்கப்படும்.
கொழும்பு- சிலாபம் வீதியில் கட்டுநாயக்கவில் வைத்து அன்டிஜென் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று, ஏனைய மாவட்டங்களில் வியாபிக்காமல் இருக்கும் வகையிலேயே இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பொலிஸார், சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர் தலைமையிலான குழுக்களே இந்த பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago