Editorial / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கான பயணக் குமிழி பயணத்தை இலங்கை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று சீக்கிரமாக அதிகரித்து வரும் நிலையிலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என அவ்வமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, எதிர்வரும் 26ஆம் திகதி வரையிலும் புதுடெல்லியில் முழு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கான பயணக் குமிழி பயணம், இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஏனைய நாடுகள் சிலவற்றுக்கும் இவ்வாறான பயணக் குமிழி பயணத்தை முன்னெடுப்பது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago