Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஏப்ரல் 04 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பில், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் தங்களுடைய இராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர்.
எனினும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இராஜினாமா கடிதத்தில் கையொப்பம் இடவில்லை இன்றேல் மறுத்துவிட்டார் என அறியமுடிகின்றது.
அத்துடன், அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன ஆகியோரும் கையொப்பம் இடவில்லையென அறியமுடிகின்றது.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடுமையாக திட்டியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (04) காலை சந்திக்கின்றார்.
3 minute ago
44 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
44 minute ago
56 minute ago