2025 மே 03, சனிக்கிழமை

ஐந்து சிறுமிகள் மாயம்

Freelancer   / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தேகம - மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுமிகள் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த சிறுமிகள் சிறுவர்  இல்லத்திற்கு அருகிலுள்ள கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க சென்ற நிலையில், காணாமல் போயுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காணாமல் போனவர்களில் ஒருவர் நாவலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருமாறு பாதுகாவலருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மற்ற நான்கு சிறுமிகளும் 16-18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் நேற்று மதியம் வரை சிறுமிகள் தொடர்பில் எந்த தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் குறிப்பட்டுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X