Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூன் 02 , மு.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு தடுப்பூசி மட்டுமே என்றாலும் விரும்பி ஏற்றுக்கொள்கிறேன் என எழுதப்பட்டிருக்கும் ஆவணத்தில், கண்டி மாவட்ட மக்களிடம் மட்டுமே கையொப்பம் பெற்றுக்கொள்வது ஏன் எனக்
கேள்வியெழுப்பியுள்ள, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, எந்த அடிப்படையில், யாரால் இந்த நிபந்தனை கொண்டுவரப்பட்டது என்றும் வினவியுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரே இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். கண்டி மாவட்டத்தில் ரஷ்ய நாட்டின் தயாரிப்பான ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
முதல் கட்டத்தில் 50000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள அவர், எனினும் ஒரு தடுப்பூசி மட்டுமே என்றாலும் விரும்பி ஏற்றுக்கொள்கிறேன்
என கையொப்பம் இடுபவர்களுக்கே கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
“ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வீ தயாரிப்புகள் இரண்டு வழங்கப்பட வேண்டும் என்பது மிக தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. உறுதியும் செய்யப்பட்டிருக்கின்றது” என்றும் தெரிவித்துள்ளார்.
முதலாவது தடுப்பூசி வழங்கி 21 நாள்களில் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். எனினும், அதனை இரண்டு மூன்று வாரங்களுக்கு பிற்போடலாம் எனவும் தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் கூறுகின்றது.
ஆனால் ஒரு தடுப்பூசி போதுமானதென எங்கேயும் கூறப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், தங்களது இயலாமையை மக்கள் மீதான தவறாக சுமத்தப்பார்க்கும் அரசாங்கமாக இது மாறியிருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் மட்டுமே அது பிரயோசனமானதாக அமையும். அவ்வாறு இல்லாத போது அதில் எந்த பயனும் கிடைக்கப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
21 minute ago
24 minute ago