2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

காணொளிமூலம் நியமன சான்றிதழை சமர்ப்பித்தார் பாக்லே

Editorial   / 2020 மே 14 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகமுக்கியமான புத்தாக்க முயற்சியாக காணொளி மாநாட்டின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது நியமன சான்றிதழை சமர்ப்பித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் இலங்கை மக்களுக்கும் இந்திய தலைமைத்துவத்தினதும் மக்களினதும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், சகலவழிகளிலும் இலங்கையுடனான நெருக்கமானதும் நட்புரீதியிலுமான உறவை வலுவாக்குவதில் இந்தியாவின் வலுவான ஈடுபாட்டையும் உறுதிப்படுத்தினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் "அயலவர்க்கு முதலிடம்" கொள்கையை மீளவலியுறுத்தும் வகையில் கொவிட்-19 போன்ற சவால்களை எதிர்கொள்ளல், பரஸ்பர செழுமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக இலங்கையுடனான நட்புறவைத் தொடர்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X