Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Yuganthini / 2017 ஜூலை 17 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கூட்டாட்சியைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு பல்முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்திலிருந்து விலகி, தனியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு, அரசாங்கத்திலிருக்கின்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையிலேயே, இந்தப் பரஸ்பர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு முயலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சி ஒருபுறம் முன்னெடுக்கப்படுகின்றது.
மறுபுறத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்துக் கொண்டு, புதிய கூட்டாட்சியை உருவாக்குவதற்கான முயற்சியும் முன்னெடுக்கப்படுகின்றது. மற்றொரு பக்கமாக, அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ள உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நேரடியான தலையீட்டின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.
இவற்றுக்கிடையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நேரடியான தலையீட்டின் ஊடாக, நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியை இன்னும் மூன்று வருடங்களுக்கு நீடித்துக் கொள்வதற்கான முயற்சியும் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago