Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
J.A. George / 2021 பெப்ரவரி 13 , பி.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.
பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண்ணொருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண்ணொருவர், IDH வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண்ணொருவர், வத்துபிட்டிவல வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 46 வயதான பெண்ணொருவர், அங்கொட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கண்டி பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்ணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நாராங்கொட பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஆண்ணொருவர், அங்கொட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago