Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 டிசெம்பர் 10 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
பொலிஸாரால் கைது செய்யப்படுவோர் கொலை செய்யப்படுவதை நியாயப்படுத்தி வரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அந்த கொலைகளுக்கு ஒருநாள் பதிலளிக்க வேண்டிய நிலைவரும். அன்று நாம் பார்த்துகொள்கிறோம் என்று தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி, அதிகாரத்தைப் பயன்படுத்தி சரத் வீரசேகர, வசந்த கர்ணாகொட ஆகியோரே கொலைகளைச் செய்தனர் எனவும் தெரிவித்தார்.
வரவு- செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நேற்று (09) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், பொலிஸாரால் கைது செய்யப்படுபவர்கள் கொலை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதற்கு எதிராக நான் பேசும்போது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், போதைப்பொருள் வர்த்தகர்களுடன் எனக்கு தொடர்பிருப்பதாகக் காண்பிக்க முயற்சித்தார் என்று குறிப்பிட்டார்.சரத் வீரசேகரவைபோல வர்த்தகர்களிடம் பணத்தைப் பெற்று அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுபவன் நானல்ல.
இதேவேளை, சபைக்குப் படம் ஒன்றை சமர்ப்பித்த சரத் பொன்சேகா, ''இந்த படத்தில் சரத் வீரசேகரவுடன் இருப்பவர் லெடியா. லெடியாவே இலங்கைக்குப் ஐஸ் போதைப்பொருளை
கடத்துகிறார். லெடியாவின் சகோதரும், அவரது நண்பரும் படத்தில் இருக்கிறார்கள் என்றார்.
ஒரு பாதாள உலகக் கோஷ்டியினருடன் இணைந்து அவர்களைப் பாதுகாக்க மற்றொரு பாதாள உலகக் கோஷ்டியினரை கொலை செய்யும் வேலைகளிலேயே வீரசேகர ஈடுபடுவதாகவும் பொன்சேகா குற்றம் சுமத்தினார்.
இதேவேளை, சரத் வீரசேகரவின் செயலாளர் திருட்டுத்தனமாக தங்கங்களை தோண்ட சென்றுள்ளதோடு, இடங்களை கொள்ளையிடும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்
எனவும் குற்றம் சுமத்தினார்.
8 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
30 minute ago