2025 மே 15, வியாழக்கிழமை

சந்திரிகாவால் சற்று சலசலப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காப்பாளருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு திடீரென, இன்றுக்காலை நுழைந்தமையால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.

அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட எவருமே, சந்திரிகாவின் வரவை எதிர்பார்க்கவில்லை. இதனாலேயே அங்கு சலசலப்பு ஏற்பட்டது. எனினும், அவருடைய வருகைக்கான உண்மையான காரணங்கள் எவையையும் கண்டறியவில்லை

இதேவேளை, சு.கவின் தலைமையகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த ஐ.ம.சு.கூவின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவிடம் ​இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தினந்தோறும் கூட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இதன்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி முகாமைத்துவ திட்டமிடல் கூட்டம் இடம்பெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக, சந்திரிக்கா வந்திருக்கலாம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .