2025 மே 14, புதன்கிழமை

சுவிஸ் தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலை

Editorial   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் ஊழியர், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (09) விடுத்த உத்தரவுக்கு அமைய அவர் அங்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

குறித்த பெண், தாக்குதல் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளாரா என்பது தொடர்பிலும்,  அவர் ஏதேனும் மன அழுத்தத்தில் உள்ளாரா என்பது தொடர்பிலும் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிந்தார்.

அத்துடன், சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு ​வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 25 ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடையை நீட்டிப்பதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

அதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விடயங்களை முன்வைத்தனர்.

அதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி குறித்த அதிகாரி வாக்குமூலம் வழங்க வேண்டும் என சுவிஸ் தூதரகத்துக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (08) இரவு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .