Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை வழங்கும் விசேட திட்டமொன்று செவ்வாய்கிழமை (10) முதல் அமுல்படுத்தப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் அன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றொழிப்புக்காக முதலாவது டோஸை பெற்றுக்கொள்ளாத, மேல் மாகாணத்திலிருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கடுமையான நோய்வாய்பட்டிருப்பவர்களுக்கு மட்டுமே இந்த விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்காக, 1906 என்ற இலக்கத்தை அழைத்து, முன்கூட்டியே பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தவிர்த்துகொள்வதற்கான நல்லதொரு தீர்வு, தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதாகும் என்றும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 minute ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 Aug 2025