Freelancer / 2021 டிசெம்பர் 11 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த மின் பிறப்பாக்கி இயந்திரத்தில் திருத்தப் பணிகள் இடம்பெற்றுவருவதால் இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல பிரதேசங்களில் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நான்கு மின் பிறப்பாக்கி இயந்திரங்களில் ஒன்றில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்படலாம் என்றும் 30 நிமிடங்களுக்கு அதிகமாக மின் தடைப்படாது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றையதினம் முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்று ஏற்கெனவே மின்சக்தி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
3 hours ago