2025 மே 01, வியாழக்கிழமை

நான்காவது முறையாகவும் சேவை நீட்டிப்பு

Freelancer   / 2023 நவம்பர் 03 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இவ்வாறு நான்காவது முறையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  சேவை நீட்டிப்பு வழங்கப்படுகின்றது.

முன்னதாக, மூன்று மாதங்கள் என்ற அடிப்படையில் இரண்டு முறையும், மூன்று வாரங்கள் சேவை நீடிப்பு ஒரு முறையும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்தது.

இறுதியாக வழங்கப்பட்ட மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன் (2) முடிவடைந்த நிலையிலேயே ஜனாதிபதி இவருக்கு மீண்டும் சேவை நீடிப்பை வழங்கியுள்ளார்.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் பிரகாரம் இவ்வாறு சேவை நீடிப்பை வழங்கியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .