2025 நவம்பர் 13, வியாழக்கிழமை

“பல உயிர்களைப் பலி கொடுக்கும் முன்னர், ஆராய்க ”

Janu   / 2025 நவம்பர் 13 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தனக்கல்ல  பிரதேச செயலகப் பிரிவின் வெலகெதர எனும் கிராமத்தில் ஹிமாயா செவ்வெந்தி என்ற இளம் பெண் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி, தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என அறியக்கிடைப்பதனால், இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வியாழக்கிழமை (13) அன்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது போன்ற இணையவழி கடன் வழங்கும் பல சட்டவிரோத நிறுவனங்கள் காணப்படுவதனால், இது தொடர்பாக ஒரு முறையானதொரு சட்டத்தை அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை ஆராய்ந்து பாரத்து, மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், இதனை இல்லாதொழிப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை முன்வைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X