Freelancer / 2023 ஜூன் 21 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தலைமறைவாகி இருந்தபோது, இலங்கையால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலின் பிரகாரம், சர்வதேச பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நாடுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செல்வபாக்கியம் சுதாகரன் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்திருந்த ஆலோசனைக்கு அமையவே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர், தங்களுடைய பிரிவில் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தியதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
எல்.ரி.ரி.ஈ அமைப்பு தொடர்பில் இந்நாட்டு படையினருக்கு தகவல்களை வழங்கிய நபர்களை படுகொலைச் செய்தல் உள்ளிட்டவை இந்த சந்தேகநபர் உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. அதற்கான திட்டங்களை இக்குழுவினர் தீட்டி வந்ததாக விசாரணைகளின் ஊடாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
மூதூர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர், 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண பிரபல தலைவரான “இலங்கீத் மாஸ்டர்” என்பவருடனேயே இவர் தப்பியோடியுள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்விருவம் இந்நாட்டுக்குள் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிதி சேகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்துள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
2 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026