Editorial / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
தனக்கு வழங்கப்பட்ட விடுதியைத் திறக்கும் போது, அங்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் அவருடைய ஆதரவாளர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தமையைப் பார்த்து, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் வாயடைத்து நின்றுவிட்டார்.
அந்த விடுதி, சிவசக்தி ஆனந்தன் எம்.பிக்கு வழங்கப்பட்டிருந்தது. கடந்த பொதுத் தேர்தலில் மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, விடுதியைப் பூட்டிவிட்டு, அதன் சாவியையும் அவர், அரசாங்க அதிபரிடம் ஒப்படைத்திருந்தார்.
இந்நிலையில், புதிய எம்.பியான குலசிங்கம் திலீபனின் கோரிக்கைக்கு அமைய, அவ்விடுதியின் சாவி, அவருக்கு வழங்கப்பட்டது. அதையெடுத்துக்கொண்டு தனது ஆதரவாளர்களுடன் நேற்றுக்காலை 10.30 மணியளவில் அங்கு சென்று, விடுதியின் கதவை குலசிங்கம் திலீபன் எம்.பி திறந்துள்ளார்.
அப்போது அங்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதனால், இருதரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும், சமரசம் செய்யப்பட்டு, இருதரப்பினரும் அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் வீடு, அந்த விடுதிக்கு பின்புறமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago