Freelancer / 2021 ஜூலை 18 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரணதண்டனையில் இருந்து மன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், கடந்த மாதம் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தேசிய வீட்மைப்பு அதிகாரசபையின் தலைவராக துமிந்த சில்வாவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இது தொடர்பான கடிதம், ஜனாதிபதியின் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

29 minute ago
48 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
48 minute ago
52 minute ago