Editorial / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சி அரசாங்கத்தில் மத்தள விமானநிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தியமை காரணமாக, ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து, சரியான மதிப்பாய்வை முன்னெடுத்து, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு, விமான நிலைய அதிகாரிகளுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தமக்கு அனுப்ப வேண்டுமென்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து, விமான நிலையம் மற்றும் விமானசேவை நிறுவனம் என்பன இதுவரை சரியான மதிப்பீட்டை முன்னெடுக்கவில்லை என, விமான நிலைய தொழிற்சங்க பிரதிநிதிகளால் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015?ஆம் ஆண்டு மத்தள விமான நிலையத்தின் 200 கோடி ரூபாய் பெறுமதியான கட்டடத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமையால் அக்கட்டடத்தின் ஏசி கட்டமைப்பு, மின்சார கட்டமைப்பு உள்ளிட்டவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் உறுதியாகியுள்ளது.
மத்தள விமான நிலையத்தின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில், நல்லாட்சி அரசாங்கம் அந்த விமானம் நிலையம் குறித்து அலட்சியமாக செயற்பட்டதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், அந்த விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago