Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூர் நிறுவனங்கள் தமது ஆணைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான அமைப்புக்கள் தேவைப்படுகின்றன.
இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது எனத் தெரிவித்துள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறையை லங்கையால்
ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது ஐ.நா. சாசனத்தின் உயிரோட்டம் மற்றும் ஆவணங்களுக்கு ஏற்ப அமையவில்லை என்றும் குறிப்பிட்டார்.
பொதுநவாய பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன் நியூயோர்க்கில் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பொன்றில், பொதுநவாய நாடுகளுடனான பேச்சுவார்த்தை மற்றும் ஈடுபாட்டிற்கான இலங்கையின் செயலுறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய பின்னரே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுநவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் இலங்கை முன்னெச்சரிக்கையாகவும், அமைப்பின் மதிப்புக்கள், கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு இணங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் வெளிநாட்டு
அமைச்சர் பீரிஸ் நினைவு கூர்ந்தார்.
பொதுநவாய நாடுகளுடன் வணிகம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளிலான ஒத்துழைப்பை இலங்கை மேலும் எதிர்பார்க்கின்றது. சதுப்புநில மறுசீரமைப்பில் வெற்றி பெற்றுள்ள இலங்கை, நீலப்பசுமை சாசனத்தின் தலைமை நாடாக மேலும் உருவெடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
உணவுப் பாதுகாப்பை மையமாகக் கொண்ட விவசாய உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தி அண்மையில்`காலநிலை மற்றும் பசுமைப் பொருளாதாரம்`எனும் முன்முயற்சியை இலங்கை ஆரம்பித்துள்ளது.
தனித்துவமான மற்றும் உற்சாகமூட்டும் வகையில், அனைத்து உறுப்பு நாடுகளும் பொதுவான நோக்கமொன்றை அனுபவிக்கும் பன்முகத்தன்மையின் கலவையே பொதுநலவாயம் ஆகும் என வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன் உறுப்பினர்கள் அனைவரும் பொதுவானதொரு சட்டப் பின்னணியின் நன்மையைக் கொண்டுள்ளனர், எனினும் அபிவிருத்தியின் பல்வேறு வழிகளைப் பின்பற்றினர். நல்லிணக்கம் தொடர்பில் நாட்டில் உள்ள உள்ளூர் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுச்செயலாளர் ஸ்கொட்லேன்ட்டுக்கு வெளிநாட்டு அமைச்சர் விளக்கினார்.
இது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாவதுடன், உள்ளூர் நிறுவனங்கள் தமது ஆணைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான அமைப்புக்கள் தேவைப்படுகின்றன. இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது.
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறை குறித்து குறிப்பிட்ட அவர், அதனை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது ஐ.நா. சாசனத்தின் உயிரோட்டம் மற்றும் ஆவணங்களுக்கு ஏற்ப
அமையவில்லை என்றும் குறிப்பிட்டார்.
2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கான தனது விஜயத்தை அன்புடன் நினைவு கூர்ந்த பொதுச்செயலாளர் ஸ்கொட்லேன்ட், பொதுநலவாய அமைப்புடன் இலங்கை தொடர்ச்சியாகப் பேணி வந்த நெருக்கமான ஈடுபாட்டைப் பாராட்டினார்.
2019 இல் பொதுநலவாய சட்ட அமைச்சர்கள் மாநாட்டை நாடத்தியமைக்காக இலங்கைக்கு நன்றிகளைத் தெரிவித்த அவர், வர்த்தகம், விளையாட்டு, இளைஞர்கள் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான இலங்கையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பொதுநலவாய அமைப்பு பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
பொதுநலவாய அமைப்பின் 54 உறுப்பு நாடுகளில் ஒன்றான இலங்கை, 2013 இல் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை நடாத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
18 minute ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 Aug 2025