2021 ஜூலை 29, வியாழக்கிழமை

மலேசியாவில் இருந்து 150 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

Editorial   / 2020 ஜூன் 30 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ​தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல், மலேசியவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் விசேட விமானம் மூலம் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து, இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட 150 இலங்கையர்களும் தொழில் மற்றும் உயர் கல்விக்காக மலேசியாவுக்குச் சென்றவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .