2025 மே 17, சனிக்கிழமை

மஹாவலி ‘எல்’ வலயத்துக்குத் தடை

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மஹாவலி எல் வலயத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

நேற்று (03) மாலை, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற வடக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்திலேயே மேற்படி உத்தரவை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

கடந்தமுறை நடைபெற்ற செயலணிக் கூட்டத்தில் மஹாவலி தொடர்பில் எதுவித மாற்றுக் குடியேற்றங்களும் இல்லையென ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற செயலணிக் கூட்டத்தின்போது, ஓகஸ்டில் வழங்கப்பட்ட மீன்பிடி அனுமதிகள் மற்றும் குடியேற்றம் சம்பந்தமான ஆதாரங்களைச் சமர்ப்பித்த சுமந்திரன், இவற்றை உடனடியாகத் தடைசெய்ய வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.

இதன்போது, மஹாவலி எல் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி, வடக்கில் மேற்கொள்ளப்படும் மஹாவலித் திட்டங்களை உடனடியாக நிறுத்தும்படி, திட்டப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார் என சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .