Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மார்ச் 18 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 4.30 மணிமுதல் மீண்டும் அறிவிக்கும் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
புத்தளத்தில் உள்ள 11 பொலிஸ் பிரிவுகளிலும் சிலாபத்தில் உள்ள 7 பொலிஸ் பிரிவுகளிலும் ஊடரங்கு சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளிலும் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வரவுள்ள பகுதிகள்
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாரவில, மாதம்பை, கொஸ்வத்த, தங்கொட்டுவ, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ ஆகிய பொலிஸ் பகுதிகளில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.
அத்துடன், புத்தளம் பொலிஸ் பிரிவில், முந்தல், உடப்பு, கற்பிட்டி, நவகத்தேகம, பள்ளம, களுகரகஸ்வெவ, ஆனைமடு, வனாத்தவில்லுவ, சாலியவெவ, நவகத்தேகம ஆகிய பகுதிகளில் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago