2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மூவருக்கு கொரோனா

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கந்தகாடு  சீர்த்திருத்த மய்யத்தின் ஆலோசகராக செயற்பட்ட ஒருவருக்கும் அவருடை இரு பிள்ளைகளுக்கும் கொரோன வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேற்படி ஆலோசகர்  ஜுலை முதலாம் திகதி அநுராதபுரம் திஸாவெவவிலுள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளதோடு, மறுதின ஜுலை இரண்டாம் திகதி அவர் பணியாற்றும் முகாமுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார். 

இருப்பினும், அவரை முகாமுக்குள்  நுழையாமல் மீண்டும் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார் எனத் தெரிவித்த அவர்,  மேற்படி ஆலோசகர் தனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் அவருடைய இறுதி கிரியைகளில் பங்கேற்றுள்ளார் என்றும் தெரிவித்தார்.

 எவ்வாறாயினும், அவருடன் தொடர்புபட்ட 230 பேரை அடையாளம் கண்டு அவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகவும், மேற்படி ஆலோசகரின் குழந்தைகளுக்கு பதினொன்று, பன்னிரண்டரை வயதென அறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X