2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ரயில் மோதியதில் தண்டவாளத்தில் தூங்கிய 17 தொழிலாளர்கள் பலி!

Editorial   / 2020 மே 08 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் அருகே, தண்டவாளத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த 17 தொழிலாளர்கள் சரக்கு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தொழிலாளர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என்றும், அவர்கள் அவுரங்காபாத் எம்ஐடிசிக்குச் சென்று கொண்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நீண்ட தூரம் நடைபயணமாக சென்றதால், இரவில் அவர்கள் ரயில் பாதையில் ஓய்வெடுத்துள்ளனர்.

இன்று காலை 6 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன் பின்னர், ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர். 

சரக்கு ரயில் கடந்து சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X