Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார அறிவுறுத்தல்களை மீறும் வகையில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செயல்படுவார்களாயின், மீண்டும் பொது போக்குவரத்து சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தும் நிலை ஏற்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கண்டியில், நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் பயணிப்பது உறுதி செய்யுமாறும் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக பஸ்கள் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
"அனைத்து பஸ் உரிமையாளர்கள் சங்கங்களும் போக்குவரத்து சேவைக்கான சுகாதார ஆலோசனை வழிகாட்டிகளுக்கு உடன்பட்டுள்ளன. தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள் மீறப்படுமாயின் தற்போதைய டெல்டா தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை இடைநிறுத்த வேண்டி ஏற்படும்" எனவும் அவர் கூறினார்.
17 minute ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 Aug 2025