Editorial / 2020 ஜூன் 12 , பி.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகனங்களை பறிமுதல் செய்ய நிறுவனங்கள் பின்பற்றும் வழிமுறைகள் சட்டவிரோதமானது என்பதால், அதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வாகனங்களை பறிமுதல் செய்கின்றமை தொடர்பில் லீசிங் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளை மறு அறிவித்தல் வரை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் ஜனாதிபதி, பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லீசிங் கடன் தவணைகளை ஆறு மாதங்களுக்கு இரத்து செய்யுமாறு ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடன் தவணைகளை செலுத்தத் தவறிய வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயல் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
கடன் தவணைகளை செலுத்தத் தவறும் பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாரை அறிவுறுத்தியுள்ளார்.
9 minute ago
11 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
2 hours ago
2 hours ago