2025 மே 03, சனிக்கிழமை

2 வாரங்களில் கடும் பஞ்சம் ஏற்படும்

Nirosh   / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் இரண்டு வாரங்களில் வௌநாட்டு கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வருவதால் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ, அடுத்த சில வாரங்களில் அரசாங்கத்தால் அத்தியாவசிய உணவுப்பொருட்களை கூட வழங்க முடியாது என்றார்.

நேற்று முன்தினம் (12) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், யுனதனவி மின் உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதுடன், இதன் மூலம் மின்சாரம் தொடர்பான சர்வாதிகாரத்தை வௌநாட்டு நிறுவனத்தக்கு வழங்குவதன் மூலம் நாட்டுக்கு பாரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டார்.

நாட்டின் இன்றைய நிர்வாகம் செல்லும் விதத்தில் எமது நாட்டில் டொலர் இருப்பதற்கான சாத்தியமே இல்லை. கடந்த காலங்களில் பிரயோசனமற்ற பல வேலைத்திட்டங்களுக்கு அதிக வட்டியின் கீழ் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விசேடமாக 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பெற்றுக்கொண்ட கடனைச் செலுத்துவதில், அதன் பின்னர் வந்த அனைத்து அரசாங்கங்களும் சிரமத்தை எதிர்நோக்கின என்று சுட்டிக்காட்டினார்.

அன்று பெற்றுக்கொண்ட கடன் மூலம், நாட்டு நன்மை பயக்கும் ஒரே வேலைத்திட்டம் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமாகும். ஏனைய அனைத்து வேலைத்திட்டங்களும் வௌ்ளை யானை போன்று நாட்டுக்கு பயனற்ற வேலைத்திட்டங்களே என்றார்.

நிதியமைச்சர் முன்வைத்த பட்ஜெட் தொடர்பில் எவ்வித தௌிவும் இல்லை. அதனால் தான் அதற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாமல் போனது.
தான் அரசியலில் இருந்தாலும் தான் மக்கள் பக்கமே இருப்பதாகவும் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் அதன் தலைவர்கள் செய்யும் தவறை தவறென்று சுட்டிக்காட்டும் தைரியம் தனக்கு அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதியின் அடிமைகளாக மாறியுள்ளனர். சகலருக்கும் முதுகெலும்பு இல்லை. இன்றைய அமைச்சர்கள் ஜனநாயக நாட்டில் முழுமையாக பொறுப்பு கூறும் அமைச்சர்கள் அல்ல. ஜனாதிபதியின் அடிமைகளாக மாறியுள்ளனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X