Freelancer / 2026 பெப்ரவரி 28 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28) நடைபெறவுள்ள போட்டியே, தாம் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றும் கடைசிப் போட்டியாகும். இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே அப்பதவியிலிருந்து விலகுவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜயசூரியவின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலத்தில், இலங்கை அணி அனைத்து வகையான போட்டிகளிலும் 74 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 34 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.
அத்துடன், 2 போட்டிகள் எவ்வித முடிவுகளுமின்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R
42 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
4 hours ago