Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ள கைதிகள் தொடர்பான பெயர்ப்பட்டியல் நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த பெயர்ப்பட்டியல் ஜனாதிபதி செயலகத்துக்கு தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த பெயர்ப்பட்டியலுக்கு அனுமதி வழங்கிய பின்னர் நாளை (04) கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என, சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், மனித கொலை, பெண்கள் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட முக்கிய குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளுக்கு இதன்போது, பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என, அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .