2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

7 இலட்சம் பேருக்கு சிவப்பு அறிவித்தல்

Editorial   / 2023 டிசெம்பர் 04 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 இலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது, நாட்டின் மொத்த சனத் தொகையில், 70 இலட்சத்துக்கும் அதிகமானோர் மின்சார நுகர்வோர்களாக உள்ளனர்.

அவர்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு இவ்வாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மொத்த மின்சார பாவனையாளர்களில் 65 இலட்சத்துக்கும் அதிகமானோர் திட்டமிட்டபடி மின் கட்டணத்தைச் செலுத்தி வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணமாக, நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்துவதற்கு 45 நாட்கள் கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .