Editorial / 2025 ஒக்டோபர் 24 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ.எச்
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் கொட்டும் கனமழையிலும் வௌ்ளிக்கிழமை (24) அன்று 38 வது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனமழை காரணமாக மழையில் நனைந்து குறித்த விவசாயிகள் தங்களது விவசாய நிலம் சூரிய மின் சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டதை அடுத்து அதனை மீள பெற்றுத்தரக்கோரி சத்தியாக் கிரகப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலை மாவட்ட செயலகம் முன் குறித்த போராட்டம் அடைமழையும் பாராது அப்பாவி ஏழை விவசாயிகள் தங்களது சிறு குழந்தைகளுடன் தீர்வு கோரி போராடி வருகின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகள் தெரிவிக்கையில், மழை காலங்களில் நனைந்து போராடுவதை நடப்பு கால அரசாங்கம் ரசிக்கிறதா? எங்களுக்கான தீர்வை இப்படி தான் தருவோம் என்பதை எழுத்து மூலமாக அறிவித்தால் என்ன? இதற்கு முன்னர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவ்வளவு அதிகாரிகளுக்குள்ளும் சொல்லப்படும் விடயங்கள் சாத்தியமில்லை.அரசாங்கத்தை நம்பியே இங்கு மழையில் நனைந்து தீர்வு கேட்கிறோம். எமது கஷ்டத்தை உணருங்கள் ஜனாதிபதி கூறுகிறார்"ஓடும் ரயிலில் டொபி விற்று வறுமைப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்ததாகவும் தெரிவிக்கிறார்கள். அதே நிலையில் கைக் குழந்தையுடன் பெற்றோர்கள் வறுமையில் வாடுகின்றனர். அரசியலுக்காக அல்ல விவசாய பட்டியலை உரிய திணைக்களத்தில் பெற்று தீர்வை பெற்றுத் தருவீர்கள் என காத்திருக்கிறோம் என்றார்கள்.









4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025