2025 மே 19, திங்கட்கிழமை

அதிகாரிகளுக்கு பணிப்புரை...

Editorial   / 2018 ஜூன் 26 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று முக்கியத்துவமிக்க பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் அணைக்கட்டை அண்டிய பிரதேசத்தில் நீண்ட காலமாக இருந்துவரும் குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் பங்குபற்றுவதற்காக அங்கு சென்றிருந்த ஜனாதிபதி, நேற்றுக்காலை (25) உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பராக்கிரம சமுத்திரத்தை அண்டிய பகுதியில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதை அவதானித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக அவ்விடத்திற்கு உரிய அதிகாரிகளை அழைத்த ஜனாதிபதி, இந்த குப்பை பிரச்சினையை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X