Mayu / 2024 ஜனவரி 02 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை சேனநாயக்க சமுத்திர நீர்ப்பாசனக் குளத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் நேற்றைய தினம் (01) இரவு 04 வான் கதவுகள் 01 அடி திறக்கப்பட்டுள்ளதால் கரையோரப் பகுதியில் வாழும் பொது மக்கள் அவானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் அறிவித்துள்ளார்.
இக்குளத்தின் கொள்ளளவு நிலை 104 அடி ஆகும். தற்போது 102.4 அடியாக உயர்ந்து உடைப்பெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
எனவே, கல்லோயா ஆறு மற்றும் இதர கால்வாய் பகுதியில் வெள்ளம் ஏற்பட கூடிய சூழ்நிலை காணப்படுவதால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எம்.எஸ்.எம். ஹனீபா


4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago