2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அரச சேவையாளர்கள் கௌரவிப்பு…

Editorial   / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், வருட இறுதி ஒன்றுக் கூடலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று (30) நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட பலர் கௌரவிக்கப்பட்டனர்.

அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகள் தொடர்பாக இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி   ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றவர்கள் தொடர்பாகவும் வாழ்த்துப்பா மூலம் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது.  (படப்பிடிப்பு - வி.சுகிர்தகுமார் )


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X