Editorial / 2018 ஜனவரி 31 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் சேதன விவசாய முறையின் கீழ், உற்பத்தி செய்யப்பட்ட பயிர்களின் 2ஆம் கட்ட அறுவடை விழா இன்று (31) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அபிவிருத்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நஞ்சற்ற உற்பத்தி விவசாய முறை மூலம் மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கடலை மற்றும் மரக்கறி வகைகள் அறுவடை செய்யப்பட்டன.
பாடசாலை அதிபர் நாதிரா அமீன் பாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிண்ணியா விவசாய போதனாசிரியர் ஏ.எஸ்.எம்.ஜெமீன் அதிதியாக கலந்து கொண்டார். (படங்கள் - ஒலுமுதீன் கியாஸ்)



24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026