Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். முனியப்பர் கோவில் முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை (16) அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அரசியல் கைதிகளின் உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், க.சர்வேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
'எனது கணவனைக் கைது செய்து கொண்டு செல்லும் போது, எனது வயிற்றில் பிள்ளையிருந்தது. தற்போது எனது பிள்ளைக்கு 5 வயதாகின்றது. இன்னமும் எனது கணவனை விடுதலை செய்யவில்லை. எங்களிடம் அழுவதற்கு கண்ணீர் இல்லை. எனது கணவரையும் மற்றவர்களையும் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்திடம் மன்றாடிக் கேட்கின்றோன்' என போராட்டத்தில் கலந்துகொண்ட தாயொருவர் அழுதமை அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)
58 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago