2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

இனவாதத்தை தடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல்

Gavitha   / 2017 மே 19 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தலைதூக்கியுள்ள இனவாதச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான முன்னெடுப்புகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுன்ற உறுப்பினர்கள் மட்டத்திலான உயர்மட்டக் கலந்துடையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை (19) தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமயவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பில், முஸ்லிம் விரோதச் செயற்பாடுகளால்,  தற்போது முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் அசாதரண சூழ்நிலை தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இவ்விடயங்களை, ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து, அவற்றுக்கானத் தீர்வைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான எம்.எச்.ஏ. ஹலீம், பைசர்முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், எஸ்.எம். மரிக்கார், முஜிபுர்ரஹ்மான், எம்.எச்.எம். நபவி, இஷாக்ரஹ்மான் ஆகியோர் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .