2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இயேசுநாதரின் படத்தில் வியர்வைத் துளிகள்

Editorial   / 2017 டிசெம்பர் 09 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வத்தளை சென். அன்டனீஸ் தேவாலயத்திலுள்ள இயேசுநாதரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து, வியர்வைத் துளிகள் வடிந்த அதிசம் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்கு, பெருந்திரளான பக்தர்கள் தேவாலயத்தை நோக்கி படையெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர் போன்று வடியும் இந்தத் திரவம் வியர்வைக்கு சமமானதாக உள்ளதெனவும் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல், இவ்வாறு புகைப்படத்தில் இருந்து வியர்வைத் துளிகள் வடிந்து வருவதாக வத்தளை தேவாலய வண. அருட்தந்தை சன்ஜீவ் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

வியர்வை வடியும் புகைப்படம், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின், சாலக்குடி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

கண்ணீர் போன்ற நீர்த்துளிகள் வடியும் இந்தப் படம், ஆரம்பத்தில் நிரோமி அமரசிங்க என்ற பெண்ணின் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாக அருட்தந்தை மென்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கைக்கு மாறான நிகழ்வு ஏற்பட்ட பின், இந்தப் படம் தேவாலயத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வப்போது இயேசு நாதரின் நெற்றியில் இருந்து வியர்வைத் துளிகள் வடிந்ததாக நிரோமி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் உரிய முடிவுக்கு தற்போது வர முடியாது. இது தொடர்பில் அறிவியல் விளக்கம் இருக்கலாம். ஆனால் யாரால் அதை நிரூபிக்க முடியும் என்று எனக்கு தெரியாதென அருட்தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .