2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இ.தொ.கா.வின் மேதின நிகழ்வு

Editorial   / 2018 மே 07 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சந்ரு, எஸ்.சதீஸ், ஆ.ரமேஸ்

இலங்கை தொழிலாளர் காங்ரசின் 79வது மேதின நிகழ்வு, இன்று (07) காலை 11மணிக்கு இ.தொ.கா.வின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது இ.தொ.கா.வின் மேதின பேரணியானது, நுவரெலியா சினிசிட்டா  நகரசபை மண்டபத்தின் அருகாமையிலும், ஏ​னைய இரண்டு பேரணிகள் ஒன்று நுவரெலியா வியாபார மத்திய நிலையத்திலும், மற்றைய பேரணி நுவரெலியா ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையிலும் ஆரம்பிக்கப்பட்டு, மூன்று பேரணிகளும் நுவரெலியா அஞ்சல் நிலையத்துக்கு அருகாமையில் ஒன்றிணைந்து, நுவரெலியா வாகனதரிப்பிடத்தில் வந்தடைந்தது.

மேலும், இ.தொ.கா.வின் மேதின பேரணியில், இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் உட்பட சமூக நலன்புரி ஆரம்ப கைதொழில் பிரதி அமைச்சர்  முத்துசிவலிங்கம், மத்திய மாகாண இந்து கலாசார தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பிலிப்குமார், சக்திவேல், பிரதேசசபையின் தவிசாளர்கள்  மற்றும் பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X