2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

“உயிர்களைக் காப்பாற்ற சவாரி”

Editorial   / 2025 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை முழுவதும் தற்கொலைகளின் எண்ணிக்கையைக் குறைத்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒரு தனித்துவமான பயணத்தை 25 க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுனர்கள் “உயிர்களைக் காப்பாற்ற சவாரி” எனும் தொனிப்​பொருளில் மேற்கொள்ளவுள்ளனர்.

இது 13 நாள் பயணம் அஹுங்கல்லவில் ஆகஸ்ட் 29ஆம் திகதி ஆரம்பமாகும்.  13 நகரங்கள் வழியாக சென்று 1333 கிலோ மீற்றர்களை கடப்பார்கள்.

செப்டம்பர் 10 ஆம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினத்தன்று இந்த சைக்கிளோட்ட விழிப்புணர்வு நிறைவடையும் 

இந்த அணிவகுப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, எந்த ஒரு தொலைபேசி நெட்வொர்க் மூலமாகவும் கிடைக்கும் இலவச, ரகசியமான, தொலைபேசி நெருக்கடி ஆதரவு சேவையான CCCline 1333 பற்றி இலங்கை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

பயிற்சி பெற்ற நெருக்கடி ஆலோசகர்களால் பணியாற்றப்படும் CCCline 1333 தொலைபேசி சேவை, சர்வதேச லைஃப்லைன் அவுஸ்திரேலியா மாதிரியைப் பின்பற்றுகிறது மற்றும் மன அழுத்தம், பதற்றம் அல்லது தற்கொலை எண்ணங்களை அனுபவிக்கும் மக்களுக்கு உயர்தர உணர்ச்சி ஆதரவை வழங்குகிறது.

இலங்கையில் தற்கொலை செய்து கொள்ளும் 8 முதல் 10 பேரில் ஒவ்வொரு நாளும் சுமார் 30 பேர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.

“உயிர்களைக் காப்பாற்ற சவாரி” நிகழ்ச்சியின் 13 நாட்களில், CCCline குழு,   சமூகக் கூட்டங்களை நடத்த உள்ளது. மனச்சோர்வை தூண்டும் காரணிகளை அடையாளம் காண்பது, துயரத்தை அங்கீகரிப்பது, மனச்சோர்வின் அறிகுறிகளை அங்கீகரிப்பது, தற்கொலை பற்றிய கட்டுக்கதைகளை அகற்றுவது மற்றும் பயம் அல்லது வெட்கம் இல்லாமல் உதவி பெற மக்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகின்றன.

“ஒன்றாக, விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், மாற்றத்திற்காகப் பயணிப்போம் - மிக முக்கியமாக, உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பயணிப்போம்”.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .