Princiya Dixci / 2022 மார்ச் 20 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள், விசேட அதிரடிப்படை (எஸ்.ரி.எப்) மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.
இம்மாவட்டத்தில் நற்பிட்டிமுனை லிட்ரோ எரிவாயு விநியோக நிலைய மொத்த விற்பனை நிலையத்துக்கு நேற்று (19) எடுத்து வரப்பட்ட சுமார் 1,000க்கும் அதிகமான சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இதன்போது எரிவாயுவை கொள்வனவுக்காக காத்திருந்த சிலருக்கு அது கிடைக்காமையால் அமைதியின்மை ஏற்பட்டது.
எனினும், எரிவாயு நிறுவன அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.




9 minute ago
21 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
28 minute ago