2025 மே 19, திங்கட்கிழமை

ஒலிம்பிக் சுடருடன் பவனி...

Editorial   / 2018 ஜூலை 03 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ், ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.கணேசன்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை, கண்டி போகம்பரை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதால், அதனை முன்னிட்டு, ஒலிம்பிக் சுடர் எடுத்து செல்லும் நிகழ்வு, ஹட்டனில் இன்று (3) ஆரம்பமானது.

ஹட்டனிலிருந்து கண்டி போகம்பரை விளையாட்டு மைதானத்துக்கு, இந்த ஒலிம்பிக் தீபம் எடுத்து செல்லப்படவுள்ளது.

ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம், ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, கினிகத்தேனை வழியாக, கண்டி போகம்பரை விளையாட்டு மைதானத்தை சென்றடையவுள்ளது.

இந்நிகழ்வில், மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.டி.கே.ஏக்கநாயக்க,  ஹட்டன் வலய கல்விப்  பணிப்பாளர் பி.ஸ்ரீதரன், ஹட்டன் வலய கல்விப் பணிமனைக்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X